வடலூர்:வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்,வருவாய்த் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெரா கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,வட்டத் தலைவர் துரைராஜ்,செயலாளர் சந்திரவதனன்,தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் பார்த்திபன்,தமிழ்நாடு கிராம ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஞானவேல்,கிராம உதவியாளர் சங்கம் சபரி,நில அளவைப் பிரிவு மாவட்ட மகளிர் அணி செயலாளர் நதியா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்,நில அளவையர்கள்,கிராம நிர்வாக உதவியாளர்கள்,அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
