சென்னை: இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு (101) சென்னையில் காலமானார். 18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து ஏழை, தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர் நல்லகண்ணு. உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் 1.55 மணிக்கு நல்லகண்ணு காலமானார்.
