வேதாரண்யம், பிப்.25: நாகை மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஆயக்காரன்புலம் ஆர்.வி.எஸ்.பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தமிழக அரசு விளையாட்டுத்துறை சார்பில் நாகை மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டி நடத்தியது. அரசு, தனியார், சிபிஎஸ்இ ஆகிய பள்ளிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது.
இந்த கிரிக்கெட் போட்டியில் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் ஆர்.வி. எஸ்.பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் ஆர்விஎஸ் பள்ளித் தாளாளர் சுவாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டிஎஸ். பாலு, பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
