கும்பல் வன்முறை தொடர்பான விவகாரத்தில் 2018ம் ஆண்டு பொதுவழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டு தெசின் பூனாவாலா வழக்கில் கும்பல் வன்முறை மற்றும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்களைத் தடுக்க உச்ச நீதிமன்றம் முன்னதாக கடுமையாக வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. குறிப்பாக இந்த விவகாரத்தை கையாளும் விதமாக மாவட்ட அளவிலான அதிகாரிகளை நியமித்து துரிதமான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும் இதனை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதில்,” முன்னதாக வழங்கப்பட்ட பொதுவான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும். மாநில அளவில் நடக்கும் கிரிமினல் வழக்குகளை டெல்லியில் இருந்தபடி உச்ச நீதிமன்றம் நுணுக்கமாகக் கையாள்வது என்பது இயலாத காரியம் ஆகும்.

மேலும் கும்பல் வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற அந்தந்த மாநிலங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் அதிகாரிகளைத் தான் அணுக வேண்டும். குறிப்பாக பாரதிய நியாய சன்ஹிதா போன்ற புதிய சட்டங்களில் கும்பல் வன்முறைக்கென பிரத்யேக தண்டனைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்,” நீதிமன்ற அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: