புதுடெல்லி: நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த அதிகாரி நிதி சிப்பருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. சட்டீஸ்கர் கேடரின் 1994ஆம் ஆண்டு இந்திய நிர்வாக சேவை அதிகாரியான நிதி சிப்பர், தற்போது நிதி ஆயோக்கின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றி வருகிறார். தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் நேற்றுடன் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ததால் நிதி சிப்பருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
