தபால் துறை சேமிப்பு கணக்குகளில் ரூ.22 லட்சம் கோடி உள்ளது: ஒன்றிய அமைச்சர் சிந்தியா தகவல்

 

குண்டூர்: இந்திய அஞ்சல்துறையின் 38 கோடி சேமிப்பு கணக்குகளில் ரூ.22 லட்சம் கோடி வைத்துள்ளது என ஒன்றிய அமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று நடந்த கிராமின் டக் சேவக் சம்மேளனத்தில் ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “இந்தியா போஸ்டின் அஞ்சல் நெட்வொர்க், கன்வேயர் சிஸ்டம்ஸ், ரேடியோ அதிர்வென் அடையாளம், பார்கோடுகள் மற்றும் க்யூஆர் குறியீடுகள் போன்ற தொழில்நுட்பங்களுடன் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

இந்திய அஞ்சல்துறை ரூ.22 லட்சம் கோடி நிதியுடன் 38 கோடி அஞ்சலக சேமிப்பு கணக்குகளை கொண்டுள்ளது. மேலும், 3.8 கோடி சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.2.27 லட்சம் கோடி டெபாசிட்களை கொண்டுள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் இது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலபிரதேசம் போன்ற மலைப்பகுதிகளில் அஞ்சல் தளவாட விநியோகத்தை மேம்படுத்த இந்திய அஞ்சல் துறை டிரோன்களை பயன்படுத்த உள்ளது” என்று இவ்வாறு தெரிவித்தார்.

 

Related Stories: