காங்கயம் தாலுகாவில் 255 ஹெக்டேர் பரப்பில் ரூ.87 லட்சத்திற்கு பயிர் காப்பீடு

காங்கயம் : காங்கயம் தாலுகாவில் 255 ெஹக்டேர் பரப்பில் ரூ.87 லட்சத்திற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றுள்ளனர்.விவசாயிகள் பயிர்சாகுபடி மேற்கொள்ளும் போது இயற்கை பேரழிவுகள், பூச்சிகள், நோய்கள் மற்றும் பிற எதிர்பாராத நிகழ்வுகளால் நஷ்டம் ஏற்படலாம். பயிர் காப்பீட்டு தொகையை வாங்குவதன் மூலம், விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பாதிக்கும் இழப்புகளுக்கு இழப்பீடு பெறுகிறார்கள்.

இது அவர்கள் நிதி ரீதியாக மீண்டு விவசாயத்தைத் தொடர உதவுகிறது. பயிர் காப்பீடு என்பது விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு வலையாகும். ஏனெனில் அது இயற்கை பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கிறது. வெள்ளம், வறட்சி மற்றும் பிற பேரிடர்களால் ஏற்படும் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது.

பயிர் தோல்விக்குப் பிறகு விதைகள், கூலி ஆட்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற செலவுகளை ஈடுகட்ட இது உதவுகிறது. விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.விவசாயிகள் முழுமையான இழப்புக்கு அஞ்சாமல் மேம்பட்ட நுட்பங்களில் முதலீடு செய்யலாம். பல்வேறு திட்டங்கள் மூலம் பயிர் காப்பீட்டை ஊக்குவிப்பதில் அரசும் பெரும் பங்கு வகிக்கிறது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மலிவு விலையிலும் அணுகக் கூடியதாகவும் ஆக்குகிறது.

பல்வேறு விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல வகையான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. மகசூல் அடிப்படையிலான காப்பீடு,பயிர் மகசூல் உத்தரவாதமான அளவை விடக் குறைந்தால் ஈடுசெய்யும். காங்கயம் தாலுகாவில் மானாவாரிப் பயிர் சாகுபடியை அடிப்படையாகக் கொண்டது.

சோளம், பயறு வகைகள் மற்றும் தென்னை முக்கிய பயிர்களாக உள்ளன.இயற்கை விவசாயம் மற்றும் மாட்டுத் தீவன சாகுபடி இப்பகுதியில் சிறப்பாக நடைபெறுகிறது.மழை காலங்களில் சோளம், மக்காச்சோளம் மற்றும் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. கால்நடைகளுக்கான தீவனச் சோளம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும், வளரும் நவீன யுகத்தில் மற்ற துறைகளுடன் போட்டியிடும் அளவிற்கு நவீனப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களால் தமிழக சாகுபடி பரப்பு உயர்ந்தது.

காங்கயம் வட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனம் மூலம் 48000 ஏக்கர் நிலங்களும், கீழ்பவானி பாசனம் மூலம் 18000 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன. சுமார் 1.34 லட்சம் ஏக்கர் நிலங்கள் மானவாரி விவசாய நிலங்கள் ஆகும்.

கீழ்பவானி பாசனப் பரப்பில் கரும்பு,நெல்,குச்சி கிழங்கு,மஞ்சள் போன்ற பயிர்களும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன பகுதியில் சோளம்,காய்கறிகள்,எண்ணெய் வித்துக்கள், முருங்கை போன்ற பயிர்களும், மானவாரி விவசாய நிலங்களில் எண்ணெய் வித்துக்கள், சோளம் போன்ற பயிர்களும் கால்நடை வளர்ப்பும் பிரதானமானதாக உள்ளது.

தண்ணீர் வசதி உள்ள நிலங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. காங்கயம், வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை செயல்பட்டு வருகிறது.

ரபி பருவத்தில் காப்பீடு வழங்கப்படுகிறது. இது இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கிறது. இத்திட்டத்தில் நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, மற்றும் வெங்காயம் போன்ற பயிர்கள் காப்பீடு செய்யப்படுகின்றன காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூர் உள்பட தாலுகவில் 2025ம் ஆண்டில் நெல் சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு விவசாயிகள் 255 ெஹக்டேருக்கு ரூ.87 லட்சம் காப்பீடு செய்து பயன்பெற்றுள்ளனர்.

Related Stories: