கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

பாடாலூர், பிப். 21: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து பெண் நேற்று உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மனைவி மலர் (48). இவர் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் கடந்த நான்கு மாதமாக ஒரு வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நாட்டார்மங்கலம்- செட்டிகுளம் செல்லும் சாலையில் உள்ள கிணற்றின் அருகில் நின்றிருந்தபோது எதிர்பாராமல் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.

தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாடாலூர் போலீசார் உடலை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: