ஜெயங்கொண்டம், பிப்.21: ஆண்டிமடத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்தும் மூன்று நாள் இலவச அழகுகலை பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, அரியலூர் மாவட்ட திட்ட அலுவலகம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்தும் மூன்று நாள் இலவச அழகு கலை பயிற்சியானது ஆண்டிமடம் வட்டாரத்தில் வளமிகு வட்டாரங்கள் என்பதன் அடிப்படையில் நடைபெற்றது.
இதில் ஆண்டிமடம் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து 30 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த பயிற்சியினை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புச்செல்வன், அருள்சாமி ஆகிய இருவரும் துவக்கி வைத்தனர். பயனாளிகளுக்கு தமிழரசி பயிற்சி அளித்தார். பயிற்சியின் இறுதி நாளான நேற்று மாவட்ட திட்ட மேலாளர் பிரவீன், சான்றிதழ் மற்றும் உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
