சென்னை: சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வேல்முருகன் பேசியதாவது; எத்தனையோ பேர் வருகிறார்கள், திமுகவை வீழ்த்த வேண்டும், அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும், ஒழித்துவிட வேண்டும், அழித்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இந்த நாட்டிலே இன்றைக்கு இருக்கிற இடம் தெரியாமல் சென்று கொண்டிருக்கிறார்கள். நான் மிகப்பெரிய அளவில் புகழ் உரை இந்த அமைச்சர் பெருமக்களை உரைக்கவில்லை.
இந்த அரசைப் பாராட்டவில்லை. எதிரணியில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக எப்படிச் செயல்படுவேனோ, அப்படித்தான் செயல்பட்டிருக்கிறேன். ஆனால், எந்த இடத்திலும் ஒரு சிறு கடுகளவும் முகத்தைக் காட்டாமல், தாயுள்ளத்தோடு என்னை சிரித்து, கை பிடித்து, மகிழ்ந்து பேசுவார். எதிரிகள்கூட உங்களைப் பாராட்டுகிற இடத்திற்கு நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள். திமுக தொடர்ச்சியாக இரண்டாவது முறை தமிழ்நாட்டில் ஆட்சி அரியணையில் உங்கள் தலைமையில் ஏறியது என்கிற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும்.
