- கூட்டுறவு வங்கி
- சென்னை
- ஆட்சேர்ப்பு மையம்
- மாநில ஆட்சேர்ப்பு மையம்
- தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கம்
- கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்...
சென்னை: கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வுக்கான அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆள்சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில ஆள் சேர்ப்பு மையம் வெளியிட்ட அறிவிப்பு: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் 11.12.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 24ம் தேதி நடத்தப்பட்டது. எழுத்து தேர்வின் முடிவுகள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 23ம் தேதி சென்னை அண்ணாநகரில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. நேர்முக தேர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதிச் சீட்டினை மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்திலிருந்து (www.tncoopsrb.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
