கோத்தகிரி அருகே பராமரிப்பில்லாத வாட்டர் ஏடிஎம்

*நோய் பரவும் அபாயம்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள பாண்டியன் பார்க் பகுதியில் உள்ள வாட்டர் ஏடிஎம் சுகாதாரமற்ற நிலையிலும், முறையாக குடிநீர் வராமலும் பராமரிப்பின்றி நோய் பரவும் நிலையில் காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும், வனவிலங்குகள் நலன் கருதியும் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மிக முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மூலம் வாட்டர் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த வாட்டர் ஏடிஎம்-ல் 5 ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்களை செலுத்தி குடிநீர் பிடித்து கொள்ளும் வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த வாட்டர் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களிலேயே உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் போதிய வரவேற்பை இழந்தது.

தற்போது வரை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி நடைமுறையில் இருக்கும் வாட்டர் ஏடிஎம் சேவை முறையான பராமரிப்பின்றி இருக்கும் அவல நிலைதான் உள்ளது.

குறிப்பாக, கோத்தகிரி அருகே உள்ள பாண்டியன் பார்க் பகுதியில் உள்ள வாட்டர் ஏடிஎம்-ல் நாணயம் செலுத்தியும் குடிநீர் வராமலும், தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் சுகாதாரமற்ற முறையிலும் இருக்கும் அவல நிலை உள்ளது.

குடிநீர் பிடித்து குடிக்கச்சென்ற ஒருவர் கூறுகையில், ‘‘என்னால் ஐந்து லிட்டர் தண்ணீர் பாட்டில் எடுத்து வர முடியாது. அதனால் நான் வாட்டர் ஏடிஎம்-ல் தண்ணீர் பிடிக்க வந்து நாணயம் செலுத்தி தண்ணீர் பிடிக்க சென்றேன். ஆனால், பத்து சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது.

இதில், தண்ணீர் பிடித்து குடிக்க முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி இதுபோன்ற ஏடிஎம் இயந்திரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: