சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு கோரிக்கைகளை வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் இன்று காலை நடந்தது. பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது, பெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சி தலைவரான செல்வப்பெருந்தகை பேசுகையில், பெரும்புதூர் தொகுதியில் பல சாலைகள் பழுதடைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பு அவற்றை பழுது பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் அதிக தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகினறது. காஞ்சிபுரம் – வண்டலூர் சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், முறைப்படி கடிதம் வழங்கினால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன் கோரிக்கைகளை வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தேதி அறிவித்தப்பின் கோரிக்கை விடுத்தால் அடுத்த நிதியாண்டில் தான் செய்ய முடியும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
