சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில், வரும் 20ம் தேதியில் முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கத்திலும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 19 ஆம் தேதி முதல் ஏப். 5 ஆம் வரை தாம்பரம் வரை நிறுத்தப்படும் என்றும், தாம்பரத்துக்கு காலை 6.35 மணிக்கு வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 20 ஆம் தேதி முதல் ஏப். 6 ஆம் வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். தாம்பரத்தில் இருந்து இரவு 6.25 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை இதற்கேற்ப திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: