×

கெட்டுப்போன மீன்கள் விற்றால் நடவடிக்கை உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

தேவகோட்டை,பிப்.16: தேவகோட்டை நகரில் கெட்டுப்போன மீன்கள், ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் தரமற்ற மீன்களை விற்கின்றனரா என உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நகரில் மீன்கள் அதிகம் விற்கும் பகுதிகளான யூனியன் பேருந்து நிறுத்தம் மற்றும் கண்டதேவி ரோடு வாரச்சந்தை மீன் கடைகளில் நகர் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கெட்டு போன அல்லது ரசாயனம் கலந்த கடல் உணவுகள் விற்பனை செய்கிறார்களா என ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் கெட்டுப்போன மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

 

Tags : Food Safety Department ,Devakottai ,Union Bus Stand ,Kandadevi Road Weekly Market… ,
× RELATED திண்டுக்கல் அருகே கஞ்சா விற்றவர் கைது