புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டார். புதுச்சேரி, காரைக்கால் என மொத்தமுள்ள 30 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 9,44,111 பேர். 4,43,495 ஆண் வாக்காளர்களும், 5,00,477 பெண் வாக்காளர்களும் உள்ளனர். புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 22,452 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பிறகு புதுச்சேரியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,88,696ஆக உள்ளது. புதுவை மாநிலத்தில் ஆண்கள் 3,70,955; பெண்கள் 4,17,620; மூன்றாம் பாலினத்தவர் 121 வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி வில்லியனூர்; ராஜ்பவன் தொகுதியில் குறைந்த வாக்காளர்கள் உள்ளனர்.

Related Stories: