×

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: விவசாயிகளுக்கு லாபகரமான வருமானத்தை உறுதி செய்வதற்காக 25லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தற்போதைய நிலைத்தன்மை மற்றும் விலை சூழ்நிலையின் விரிவான மதிப்பீட்டிற்கு பிறகு 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனுடன் கூடுதலாக 5லட்சம் டன் கோதுமை பொருட்கள் மற்றும் சர்க்கரையும் அடங்கும். இது விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.2025-2026ம் ஆண்டில் தனியார் நிறுவனங்களுடன் கோதுமை இருப்பு சுமார் 75லட்சம் டன்களாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் கிட்டதட்ட 32லட்சம் டன் அதிகமாகும்.

இது நாட்டில் வசதியான விநியோக நிலையை குறிக்கின்றது. 2026ம் ஆண்டு ஏப்ரல் 1 நிலவரப்படி இந்திய உணவு கழகத்துடனான மத்திய தொகுப்பில் மொத்த கோதுமை கிடைக்கும் தன்மை சுமார் 182லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஏற்றுமதி அனுமதிகள் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பு தேவைகளை பாதிக்காது என்பதை உறுதி செய்கின்றது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : EU government ,New Delhi ,Union Food Department Ministry ,
× RELATED அசாம் முதல்வர் தொடுத்த மானநஷ்ட வழக்கு;...