செங்கோட்டையன், லாட்டரி டிக்கெட் ஆளுகள வச்சிகிட்டு விஜய் பேசுறாரு… முக்குலத்தோர் புலிப்படைகட்சி தலைவர் நடிகர் கருணாஸ்

 

எதிர்வரும் தமிழக பொதுத் தேர்தல் எப்படி இருக்கும்? வருகிற சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கு ரொம்ப முக்கியமான தேர்தல். எந்த ரூபத்திலேயும், அதாவது எந்த காலத்துலயும் பிஜேபி கூட கூட்டணியே வைக்க மாட்டேன்னு அம்மா(ெஜயலலிதா) சொன்னாங்க. அந்த காலங்களில் அவங்களை தலைவியா ஏத்துக்கிட்டு அவங்களுக்காக மக்கள் வாக்களித்தார்கள். அதில் வந்து ஒரு குறுக்கு வழியில முதல்வராக அமர்ந்தவர்தான் எடப்பாடி. தமிழர்கள், தமிழ்நாட்டுக்கான நலன்களுக்கு முற்றிலும் விரோதமாக இருக்கிற ஒன்றிய அரசோட இன்றைக்கு வந்து கைகோர்த்துகிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டுக்குள்ள மதவாத ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் உள்ளவர்களுடன் கைக்கோர்க்கக்கூடிய ஒரு நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். பிஜேபி கட்சியினுடைய ஒரு கிளை கழக அமைப்பு மாதிரி இன்னைக்கு வந்து ஒரு பெரிய திராவிட கட்சியை வந்து அடமானம் வச்சிருக்காரு. இந்த சூழல்ல வந்து இன்றைக்கு நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்புகளில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சாதாரண ஒரு பாமரனும், உணரக்கூடிய ஒரு நிலையில், எடப்பாடிக்கு அது எப்படி புரியாம போச்சு என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

முழுக்க, முழுக்க தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதமாக இருக்கக்கூடிய ஒன்றிய அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்கக்கூடிய ஒரு நிலை. அதனால தமிழ்நாட்டு மக்கள் வந்து ஒரு கீழடி போன்ற, பொருநை மாதிரியான ஒரு வரலாற்றுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடிய, தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை வந்து சிவகாசி ரயில்வே நிலையங்களில் எல்லாம் வந்து, தமிழை வந்து இரண்டாம் கட்டத்தினுடைய நிலையில வச்சிருக்கக்கூடிய ஒரு நிலையில், நம்மளுடைய உரிமைகள் பாதுகாக்கப்படணும்னா நிச்சயமாக வரக்கூடிய தேர்தல் வந்து முக்கியமான தேர்தல். அதனால வந்து இது போன்ற மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஆட்சிக்கு யார் வரணும் என்று நினைக்கிறீர்கள்? தமிழர்களுடைய மாநில அரசினுடைய அந்த சுயாட்சி, மாநிலத்தினுடைய உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஒரு ஒட்டுமொத்த இந்தியாவையே இன்றைக்கு வந்து பேசக்கூடிய ஒரு நபராகவும்; சிறந்த திட்டங்கள் மூலமாக மற்ற மாநிலங்களே உற்று நோக்கக்கூடிய ஒரு இடத்துல இருக்கக்கூடிய தளபதியினுடைய ஆட்சி மீண்டும் வரணும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

அதிமுகவில் என்ன நடக்குது? எடப்பாடியை பாஜ முதல்வர் வேட்பாளரா ஏற்றுப்பாங்களா? அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்த்துகிட்டு இருக்காங்க. இன்றைக்கு இருக்கிற ஊடகங்களில், பத்திரிகை, சோஷியல் மீடியா எல்லாத்துலயுமே டெய்லி நடக்கிற எல்லா விஷயமும் வந்துட்டு இருக்கிறது. இது வழக்கமாக எடப்பாடி கிட்ட ஒன்னும் புதுசு இல்லை. அவர் வந்து காலில் விழுந்து கும்பிட்டு முதல்வராக ஆனவர். இன்றைக்கு அவங்களுக்கு வந்து எந்த காலத்துலயும் இடமில்லை. அது முடிஞ்சு போன கதைன்னு சொல்றாரு. இப்படி ஒரு நன்றி மறந்தவராக, ஒரு துரோகம் செய்யக்கூடிய ஒரு மனநிலையில இருக்கக்கூடியவர். தன்னுடைய சுயநலத்திற்காக தமிழ்நாட்டுக்கு இன்னைக்கு துரோகம் பண்ணி வச்சிருக்காரு. இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிட்டு இருக்கிறார். ஆனால் பிஜேபி வந்து ஒரு இடத்துல கூட அமித்ஷாவோ, மோடியோ இன்றைக்கு யாருமே அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவே இல்லை. அப்படி இருக்கக்கூடிய நிலைமையில் இவர்கள்(அதிமுக)செய்த ஊழல்களை மறைக்கிறதுக்காக இன்றைக்கு பிஜேபி வந்து இவர்களை நிர்ப்பந்தப்படுத்தி தான் இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். கல்வி அறிவே இல்லாத ஒரு பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நிலையிலதான் இன்றைக்கு எடப்பாடியின் நிலைப்பாடு இருக்கிறது.

நடிகர் விஜய் செய்யும் அரசியலை பற்றி? நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்காரு. ஆனா அவருடைய அரசியல் நடவடிக்கை என்பது, கடந்த 3 ஆண்டுகளாக வந்து கொடி ஏற்றுகிறார். கொடியேற்றி விட்டு 41 பேர் இறந்ததை விட்டுட்டு டான்ஸ் ஆடிட்டு இருக்காரு. அவருக்கு எந்த ஒரு கொள்கையோ, எந்த ஒரு பிடிப்போ, எதிலும் ஒரு உறுதித்தன்மையோ இல்லாத ஒரு நிலைப்பாட்டைதான் நம்ம பார்க்கிறோம். ஏற்கனவே சொன்ன மாதிரி அவரே வந்து வருமான வரி கட்டாம கார் வாங்கினார். அவர் வந்து ஊழலைப் பற்றி பேசுறதுக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதனால அவருக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பிடித்தவர்கள் படம் பார்ப்பாங்க. அதே மாதிரி நாலு பேர் ஓட்டும் போடுவாங்க. அதுல ஒன்னும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவருக்கு ஓட்டு போடுவதால் தமிழ்நாட்டுக்கு என்ன பலன்?. தமிழ்நாட்டுக்கு என்ன நலன்? அப்படிங்கிறது ஒன்று இருக்கிறது. அதனால எந்த ஒரு தெளிவும் இல்லாம, எந்த கொள்கையும் இல்லாமல் ஒரு அரசியலை வந்து, ஒரு கார்ப்பரேட் கம்பெனி மாதிரி, ஏதோ ஒரு டிவி ஷோ நடத்துற மாதிரியும், அப்பப்போ பனையூரில் ஒரு கூட்டம் போட்டுக்கிட்டு ஊடகங்களில் விளம்பரம் பண்ணிட்டு இருக்கிறார். அவர் வந்து நாளைக்கு மக்களுக்கு ஒரு பிரச்னைன்னா எப்படி வந்து நிப்பாருங்குற ஒரு கேள்வி வருகிறது.

ஏற்கனவே இறந்து போன 41 பேருக்கு நிக்காத ஒருத்தர், அவர்களை நேரடியாக சந்திச்சு கூட ஆறுதல் சொல்ல மனமில்லாத, அதற்கு தைரியமில்லாத ஒருத்தர், எப்படி வந்து நாளைக்கு வரக்கூடிய மக்கள் பிரச்னைகளை சந்திக்கப் போறாருங்குற ஒரு கேள்வி இருக்கு. அடுத்து ஊழலைப் பத்தி பேசுறவரு செங்கோட்டையன் போன்றவர்களை கூட வச்சுக்கிட்டு, அதே மாதிரி லாட்டரி டிக்கெட் விக்கிறவங்களை கூட வச்சுக்கிட்டு இவரு என்ன பேசுறாரு?. எல்லாமே முரண்பாடாக இருக்கிறது. கொள்கையில தெளிவு இல்லை. நிலைப்பாட்டில் தெளிவு இல்லை. எதுலேயும் ஒரு உறுதி இல்லை, நேர்மை இல்லை. இது வந்து தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு
துரதிர்ஷ்டவசமான ஒரு காலம். வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா? வரக்கூடிய 2026 தேர்தல் இருக்கிறது. அது தளபதி என்ன முடிவு எடுக்குறாரோ அதை பொறுத்து தேர்தலில் போட்டியிடுவேன். நிச்சயமாக என்னைப் பொறுத்தவரைக்கும் மீண்டும் வந்து நான் சார்ந்த என்னுடைய சமூக மக்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன். இது மாதிரியான, நியாயமான, மறுக்கப்படுகிற எங்களது உரிமைகளை நம்ம கேட்கக்கூடிய இடம் சட்டமன்றமாக தான் இருக்கும். அதனால நிச்சயமாக அதற்கான ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும்னு நான் நம்புறேன்.
தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை யாரால் கொடுக்க முடியும்? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கான விடியலும், அவர்களுக்கான எதிர்காலம், அடுத்த தலைமுறைகளுக்கான வாழ்க்கை, அதை உருவாக்க வேண்டும்.

அதனால் இங்கு மு.க.ஸ்டாலின் மாதிரியான ஒரு ஸ்ட்ராங்கான லீடர் தேவைப்படுகிறார். இன்றைக்கு வந்து எல்லாத்தையும் சட்ட ரீதியாவும் சரி, நேரடியாகவும் சரி, நேரடியாக தைரியமா எதிர்க்கக்கூடிய ஒரு நிலையில இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தினுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிற ஒருவர் இன்னைக்கு மு.க.ஸ்டாலின் மட்டும் தான். அவரை மிகைப்படுத்தி சொல்றதுக்காகவோ, புகழ்றதுக்காகவோ சொல்லவில்லை. நடைமுறையை சொல்றோம். வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா? வரக்கூடிய 2026 தேர்தல் இருக்கிறது. அது தளபதி என்ன முடிவு எடுக்குறாரோ அதை பொறுத்து தேர்தலில் போட்டியிடுவேன். நிச்சயமாக என்னைப் பொறுத்தவரைக்கும் மீண்டும் வந்து நான் சார்ந்த என்னுடைய சமூக மக்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன். இது மாதிரியான, நியாயமான, மறுக்கப்படுகிற எங்களது உரிமைகளை நம்ம கேட்கக்கூடிய இடம் சட்டமன்றமாக தான் இருக்கும். அதனால நிச்சயமாக அதற்கான ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும்னு நான் நம்புறேன்.
தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை யாரால் கொடுக்க முடியும்? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கான விடியலும், அவர்களுக்கான எதிர்காலம், அடுத்த தலைமுறைகளுக்கான வாழ்க்கை, அதை உருவாக்க வேண்டும். அதனால் இங்கு மு.க.ஸ்டாலின் மாதிரியான ஒரு ஸ்ட்ராங்கான லீடர் தேவைப்படுகிறார். இன்றைக்கு வந்து எல்லாத்தையும் சட்ட ரீதியாவும் சரி, நேரடியாகவும் சரி, நேரடியாக தைரியமா எதிர்க்கக்கூடிய ஒரு நிலையில இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தினுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிற ஒருவர் இன்னைக்கு மு.க.ஸ்டாலின் மட்டும்தான். அவரை மிகைப்படுத்தி சொல்றதுக்காகவோ, புகழ்றதுக்காகவோ சொல்லவில்லை. நடைமுறையை சொல்றோம்.

 

Related Stories: