×

இஸ்லாமிய புரட்சி நினைவு தினத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டார் ஈரான் அதிபர்

டெஹ்ரான்: ஈரானில் பொருளாதார சீர்குலைவைத் தொடர்ந்து அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை அடக்க பாதுகாப்பு படையினரால் பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரானில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, அயதுல்லா அலி கமேனி தலைமையில் இஸ்லாமிய குடியரசு நிறுவக் காரணமான 1979 இஸ்லாமிய புரட்சியின் 47ம் ஆண்டு நிறைவு விழா நேற்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ‘‘நாடு தழுவிய போராட்டம், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்போராட்டம், அடக்குமுறையால் மக்கள் அனுபவிக்கும் பெரும் துயரத்தை அறிவேன். அதற்காக நாங்கள் மக்கள் முன் வெட்கப்படுகிறோம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அணு ஆயுதங்களை தேடவில்லை, அது தொடர்பான எந்த ஒரு சரிபார்ப்புக்கும் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

Tags : Iran ,Islamic Revolution ,Tehran ,Islamic Republic ,Ayatollah Ali Khamenei ,
× RELATED எகிப்தின் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’...