மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை கடும் வீழ்ச்சி: நீலகிரி விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் நீலகிரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் பகுதியில் மொத்த காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது .இங்கு நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீன்ஸ், முள்ளங்கி, நூல்கோல், டர்னீப், சவ்சவ் உள்ளிட்ட பல்வேறு வகை மலை காய்கறிகள் மொத்த விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

மண்டிகளில் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வியாபாரிகள் அதனை வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே கேரட் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில்,
‘‘நீலகிரி மாவட்டத்தில் தற்போது கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் பனி காரணமாக கேரட் அழுகுவதில்லை. கடந்த சில வாரங்களாகவே கேரட் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 90 லோடு கேரட் வந்தது. ஒரு வண்டிக்கு சுமார் 10 டன் வரை வரும். கடந்த மாதம் வரை நல்ல தரமான கேரட் கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வருகிறது’’ என்றார்.

Related Stories: