வலங்கைமான் அருகே 4 கிராம ஊராட்சிகளில் திட்டப்பணிகள்

*கூடுதல் ஆட்சியர் ஆய்வு

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த இனாம்கிளியூர் உள்ளிட்ட நான்கு கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை மூலம் நடைபெற்று வரும் திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் பல்லவி வர்மா நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன.

இவ் ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு நிதிகளின் மூலம் ஊரக வளர்ச்சித் துறையால் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் நபார்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வலங்கைமான் அடுத்த இனாம் கிளியூர், புளியகுடி, வேலங்குடி, கண்டியூர் உள்ளிட்ட நான்கு கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நர்சரி உள்ளிட்ட பல்வேறு பணிகளை திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பல்லவி வர்மா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். ஆய்வில் உதவி செயற்பொறியாளர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சுகுணா மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் சண்முகசுந்தரம், வெங்கடேஷ், தொழில்நுட்ப உதவியாளர்கள் பிரபாகரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Related Stories: