டெல்லி மேம்பாலத்தில் நின்றிருந்த மர்ம காரில் பெண் உட்பட 3 பேரின் சடலங்கள் மீட்பு: சாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த காரில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வெளிப்பகுதியில் உள்ள பீராகார்ஹி மேம்பாலத்தில் கடந்த 8ம் தேதி ஒரு வெள்ளை நிற கார் நீண்ட நேரமாக நின்றிருந்தது. சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அந்த கார் அங்கேயே நின்றிருந்ததால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் மாலை 3.50 மணியளவில் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

அங்கு சென்ற போலீசார் காரின் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே மூன்று பேர் சடலங்களாகக் கிடந்தனர். காரின் உரிமையாளரான ரந்தீர் சிங் (76), நில தரகர் சிவ நரேஷ் சிங் (47) மற்றும் ஜஹாங்கிர்புரியைச் சேர்ந்த லட்சுமி தேவி (40) ஆகியோர் அந்த காரில் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் உடலில் எந்தவித காயங்களும் இல்லாத நிலையில், காருக்குள் வீசிய விஷ நெடியால் இவர்கள் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேகித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரட்டல் அல்லது பணம் பறிக்கும் நோக்கில் யாராவது இவர்களைக் கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக, உயிரிழந்த மூன்று பேரும் சம்பவத்தன்று காலை ஒரு சாமியாரைச் சந்தித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தற்போது அந்தச் சாமியாரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘சாமியாரைச் சந்தித்த பிறகு காரில் என்ன நடந்தது என்பது குறித்தும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் உடலில் எந்தவித காயங்களும் இல்லாத நிலையில், காருக்குள் வீசிய விஷ நெடியால் இவர்கள் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேகித்தனர். ஆனால் மிரட்டல் அல்லது பணம் பறிக்கும் நோக்கில் யாராவது இவர்களைக் கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related Stories: