ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடி உயர்வு

டெல்லி : ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் கோலோச்சும் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்பதால் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஐ. மாநாட்டில் மெட்டா அலெக்சாண்டர் வாங்க், கூகுள் சுந்தர் பிச்சை, டெமிஸ் ஹசாபிஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏஐ மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பிரபல ஐடி நிறுவனங்களில் இருந்து 30,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகழ்பெற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் வரும் நிலையில் நட்சத்திர ஓட்டலின் ஒரு நாள் அறை வாடகை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் சுமார் 20,000 அறைகள் மட்டுமே இருப்பதால் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஏஐ மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்தின் அருகில் உள்ள தி ஒபராய் நட்சத்திர ஓட்டலில் ஒரு இரவு தங்க ரூ.29.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 4.5 கி.மீயில் உள்ள தாஜ் மகால் ஓட்டலில் ஓர் இரவு வாடகை ரூ.22.5 லட்சமாகவும் தெற்கு டெல்லியில் உள்ள லீலா நட்சத்திர ஓட்டலில் அறை வாடகை ரூ.14.5 லட்சமாகவும் வசூலிக்கப்பட உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் சாதாரண அறை வாடகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5.6 லட்சமாக உயர்ந்துள்ளது.

Related Stories: