×

பிளஸ்2 செய்முறை தேர்வுகள் தொடங்கியது வேலூர் மாவட்டத்தில் 142 மையங்களில்

வேலூர், பிப்.10: வேலூர் மாவட்டத்தில் 142 மையங்களில் பிளஸ்2 செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி வரும் 14ம் தேதி வரையிலும், பிளஸ் 1 அரியர் மாணவ, மாணவிகளுக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வை 15 ஆயிரத்து 660 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 142 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் உட்பட அறிவியல் பாடங்களுக்கும், கணினிஅறிவியல் பாடத்துக்கும் செய்முறை தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடக்கிறது. வரும் 14ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore district ,Vellore ,Tamil Nadu ,
× RELATED மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் செயின்...