அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தானியங்கள், பாதாம், முந்திரிக்கு வரி விலக்கு: வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்தியா மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது 18% குறைக்கப்பட்டது. இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கூட்டறிக்கையில் முக்கிய அம்சங்கள்;

*ஜவுளி, தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18%ஆக குறைகிறது.

*இந்திய மருந்துப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி.

*இந்திய விவசாயிகளின் நலனைக் காக்க, விவசாய மற்றும் பால் பண்ணை பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் முழு பாதுகாப்பு அளிப்பு.

*இந்திய விமானப் பாகங்களுக்கு விலக்கு அளிக்கவும் அமெரிக்கா ஒப்புதல்.

*அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் $500 பில்லியன் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புதல்.

*அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யப்படும் தானியங்கள், சிவப்பு சோளம், பாதாம், முந்திரிக்கு வரி விலக்கு.

*அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், சோயா பீன் எண்ணெய், மதுபானத்திற்கு வரி விலக்கு.

* ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா உறுதியளித்துள்ளது.

Related Stories: