பூதப்பாண்டி: பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (70). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டுக்குள் விலங்குகள் நுழையாதபடி வீட்டை சுற்றி பிளாஸ்டிக் வலை அமைத்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை பிளாஸ்டிக் வலைக்குள் மரநாய் ஒன்று சிக்கி தவித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த நாகராஜன் மற்றும் குடும்பத்தினர் அவற்றை மீட்க முயன்றனர்.
ஆனால் மரநாய் சீறிக்கொண்டு ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது. இதனால் மரநாய் குறித்து பூதப்பாண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் விரைந்து சென்று வலையில் சிக்கிய மரநாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
