×

கந்தசாமி கோயிலில் சத்தாபரணம்

மல்லசமுத்திரம், பிப்.5: சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 28ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 1ம் தேதி தைப்பூச தினத்தன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரிழுத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சத்தாபரணம் கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சத்தாபரண தேரை இழுத்து வந்தனர். விடிய, விடிய நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். எட்டாம் நாளான நேற்று, வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடைந்தது.

Tags : Satthaparanam ,Kandasamy Temple ,Mallasamuthiram ,Thaipusam chariot festival ,Kalipatti Kandasamy Temple ,Salem-Namakkal ,Thaipusam day ,
× RELATED ரூ.86 லட்சத்திற்கு பருத்தி ஏலம்