சென்னை: கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் சைபர் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், ரூ.2.11 கோடி பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் இருந்து மீட்டு 94 புகார்தாரர்களிடம் சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் வங்கி அதிகாரி, மின்வாரிய அதிகாரி என பல்வேறு மோசடி மூலம் பணத்தை பறிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சைபர் க்ரைம் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த புகார்களில் 47 புகார் மனுக்கள் பெற்று 42 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.84,81,976 பணம் மீட்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை பெருநகர வடக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்கள் 17 மனுக்கள் பெற்று அதில் 15 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.17,97,357 பணமும், மேற்கு மண்டலத்தில் பெற்றப்பட்ட 32 புகார்கள் பெற்று அதில் 12 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.29,07,505 பணமும், தெற்கு மண்டலத்தில் பெற்றப்பட்ட 48 புகார்கள் பெறப்பட்டு அதில் 14 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.55,89.218 பணமும், கிழக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 18 புகார் பெற்றபட்டு அதில் 11 மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.24,07,543 பணம் என மொத்தம் சென்னை பெருநகர காவல் எல்லையில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக 162 புகார் மனுக்கள் பெறப்பட்டு அதில்,
94 புகார்தாரர்களின் மனு மீது நடவடிக்கை எடுத்து சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பொதுமக்களிடம் இருந்து பறித்த 2 கோடியே 11 லட்சத்து 83 ஆயிரத்து 599 ரூபாய் பணம் மீட்கப்பட்டு உரிய சட்ட விதிகளின் படி 94 புகார்தாரர்களிடம் சைபர் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர்.
