- கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- பெரம்பலூர்
- சாருபாலா
- சுப்ரதா கிளாசிக் தேசிய சாம்பியன்ஷிப்
- இந்திய பவர் லிஃப்டிங் கூட்டமைப்பு
- ஹரித்வார், உத்தரகண்ட்...
பெரம்பலூர்,பிப்.4: தேசிய வலுத்தூக்கும் போட்டியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாருபாலா முதலிடம் பெற்றார். அவரை தாளாளர், செயலாளர் பாராட்டினர். உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் இந்திய வலுத்துக்கும் கூட்டமைப்பு சார்பில், சுப்ரதா கிளாசிக் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவி சாருபாலா கலந்து கொண்டார்.
சீனியர் வலுதூக்கும் போட்டியில் 84 கிலோ எடைப் பிரிவில், 230 கிலோ எடையைத் தூக்கி மாணவி சாருபாலா தேசிய அளவில் முதலிடத்தையும், ஜூனியருக்கான போட்டியில் 84 கிலோ எடை பிரிவில், மொத்தமாக 100 கிலோ எடையைத் தூக்கி மாணவி சாருபாலா தேசிய அளவில் 2ஆம் இடமும் பெற்று சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவி சாருபாலாவை பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன், செயலாளர் அங்கயற்கண்ணி, பள்ளி துணைத் தாளாளர் ஹரீஷ் ஆகியோர் மனதாரப் பாராட்டினர். அப்போது பள்ளியின் முதல்வர் பிரதீப், ஒருங்கிணைப்பாளர்கள் கோமதி, காயத்ரி, நிர்மலா, உடற்கல்வி இயக்குனர் பிரேம்நாத், உடற்கல்வி ஆசிரியை அகிலா, உடற்கட்டமைப்பு ஆசிரியர் வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.
