அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். விஜய் அரசியலில் என்ன செய்ய போகிறார் என்ற கருத்தை சொல்லவில்லை. வீட்டில் முடங்கி இருக்கிறார். அவர் தேர்தலில் நிற்கட்டும். பின் பார்ப்போம். சினிமா கவர்ச்சி மக்கள் மத்தியில் எடுபடாது. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். திமுகவிற்கு 70 சதவீதம் மக்களின் ஆதரவு உள்ளது. கரூர் சம்பவத்திற்கு எட்டி பார்க்காத விஜய் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்?
தமிழக வரலாற்றில் கூட்ட நெரிசலில் 41 பேர் தண்ணீர் இல்லாமல் இறந்த நிலையில், அவர்களை வந்து பார்க்க மனமில்லாத விஜய் எப்படி 7 கோடி மக்களை காப்பாற்ற போகிறார்? ஏதோ நடித்து பார்க்கிறார், டான்ஸ் ஆடிப் பார்க்கிறார். இந்த டான்ஸ் பழைய டான்ஸ், இந்த டப்பாங்குத்து நம்ம ஊரிலும் ஆடலாம். தேர்தலில் எங்கள் கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றி பெற போகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பஞ்சாயத்து தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் திமுகவே வெல்லும். 4 ஆண்டு காலமாக மக்களை சந்திக்காத எடப்பாடியை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ஓபிஎஸ் திமுகவில் இணைவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். இவ்வாறு கூறினார்.
