×

தேளூர் வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அரியலூர்,பிப்.2: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த தேளூர் கிராமத்தில் புதியதாக கட்டபட்டுள்ள பாலாம்பிகை உடனமர்ந்த வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 30ம் தேதி யாகசாலை அமைத்து காலை அனுக்கை, விக்னேஸ்வர, கணபதி, நவக்கிரஹ, மஹாலசுமி ஹொமம், மங்கள, வாஸ்துசாந்தி முதலிய பூர்வாங்க முதல் கால பூஜைகள் நடைபெற்றது. தொர்ந்து ஊப்பு ஆற்றங்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால பூஜையாக மிருத்சங்கரணம், அங்குரார்பணம், ரஷாபந்தணம், கடஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், ஐவர் ஹோமம், பூர்ணாஹீதி, பூஜைகள் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 3ம் கால பூஜை மூலமூர்த்திகள் திருக்குடங்களை இடமாகக்கொண்டு வேள்விச்சாலைக்கு எழுந்தருள் செய்தல் நூதன விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் தெய்வீக பாட்டும் பரதம் மற்றும் பூர்ணாஹீதி தீபாரதணையுடன் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை யாக சாலை பூஜை நாடி சந்தானம், விஷேச திரவிய ஹோமம், மஹா பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்து, காலை 9 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க கடம்புறம்பாடு நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்து பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சிவலிங்கத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழச்சியில் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : devotees ,Thelur Vedapuriswarar Temple Kumbabhishekam Swami Darshan ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...