அரசு பூங்காவை சேதப்படுத்திய விவகாரம்: அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்கு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர் சத்யன் புகாரை அடுத்து ராஜேஷ் மீது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டு கடந்த 29ம் தேதி திறப்பு விழா நடைபெற்ற நிலையில், கொருக்குப்பேட்டையில் மாநகராட்சி பூங்காவுக்குள் புகுந்து மின்விளக்குகள், கதவுகளை சேதப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: