சென்னை: அதிமுகவை விமர்சிக்கும் விஜய் தனது சம்பளம் எவ்வளவு என வெளிப்படையாக கூறுவாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ‘விஜய் வாங்கும் சம்பளத்தில் “கறுப்பு” அதிகம்; “வெள்ளை” குறைவு. ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி பணத்தில்தான் தான் தவெக கட்சியே நடக்கிறது. யார் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று விவஸ்த்தை இல்லை.விஜய் இப்படி மேடையில் நடனமாடியதால் கரூரில் இறந்த 41 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனைப்படும்’ எனவும் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
