×

பொதுப்பணித்துறை நடவடிக்கை உடையார்பாளையத்தில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

ஜெயங்கொண்டம், ஜன.30: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையார் கிராமத்தை சேர்ந்த கவுஞ்சிநாதன் (45) என்பவர் அப்பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து கவுஞ்சிநாதனை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Udayarpalayam ,
× RELATED உடையார்பாளையம் அருகே விவசாயி விஷம்...