கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 40% உயர்வு: இன்று முதல் அமல்

கோவில்பட்டி: கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு என்று தனி மவுசு உண்டு. புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பின்னர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மூலப்பொருள் நிலக்கடலை விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.14,500க்கு உயர்ந்துள்ளதால், கடலை மிட்டாய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் கடலை மிட்டாய் விலையை 40% உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனை தெரிவித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்க செயலாளர் கண்ணன், இந்த விலை உயர்வு 29ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வரும். புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் பெயரை பயன்படுத்தி பலரும் உற்பத்தி செய்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: