வாலாஜா அரசு பள்ளியில் வாலாஜா அரசு பள்ளியில் ‘இது நம்ம ஆட்டம்’-2026 விளையாட்டு போட்டிகள்

வாலாஜா : இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தவும், சமூக முன்னேற்றம், சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மாநிலம் முழுவதும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் -2026 போட்டிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா இது நம்ம ஆட்டம்-2026 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடக்கும் தடகளம், கபடி, எறிபந்து, கையுந்து பந்து, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் வயது வரம்பு அடிப்படையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி வாலாஜாவில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கிரிக்கெட், கையுந்து பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி, ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட வட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அடுத்த வாரம் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் தெரிவித்தார்.

Related Stories: