×

ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் பவுன் ரூ.520 குறைந்தது: வெள்ளி விலை வரலாற்று உச்சம்

சென்னை: ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.520 குறைந்தது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025க்கும், பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,20,200க்கு விற்பனையானது.

தங்கம் விலையை போல வெள்ளியும் உயர்ந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3.75 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் நகை வர்ஙகுவோர் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலையில் நேற்று திடீர் மாற்றம் காணப்பட்டது.

அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,960க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,19,680க்கும் விற்பனையானது. நேற்று வெள்ளி விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. நேற்று வெள்ளி விலை ரூ.12 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.387க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3.87 லட்சத்துக்கும் விற்பனையானது.

Tags : Chennai ,
× RELATED மும்பை பங்குச் சந்தை 0.66% வரை உயர்ந்து நிறைவு!!