புலவயோ: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் உலகக் கோப்பை சூப்பர் சிக்சஸ் போட்டி, ஜிம்பாப்வேயின் புலவயோ நகரில் நேற்று நடந்தது. அப்போட்டியில் இளம் இந்தியா – இளம் ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீர்கள் ஆரோன் ஜார்ஜ் 23, வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில் 52 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின் வந்த வீரர்களில் விஹான் மல்கோத்ரா ஆட்டமிழக்காமல் 107 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 109 ரன் விளாசினார். 50 ஓவரில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. பின்னர், 353 ரன் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக, லீராய் சிவவுலா 62 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொதப்பியதால், 37.4 ஓவரில் இளம் ஜிம்பாப்வே அணி 148 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், இளம் இந்தியா 204 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றது. இந்தியா தரப்பில் உத்தவ் மோகன், ஆயுஷ் மாத்ரே தலா 3, அம்பரீஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
யு-19 உலகக்கோப்பை ஓடிஐ இந்தியா இமாலய வெற்றி: விஹான் அட்டகாச சதம்
- U-19 உலகக் கோப்பை ODI
- இந்தியா இமயமலை
- விஹான் அட்டகாஷா
- புலவாயோ
- 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸர்கள்
- புலவாயோ, ஜிம்பாப்வே
- இந்தியா
- ஜிம்பாப்வே
