பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகுராஜ் உயிரிழந்தார். போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரவுடி அழகுராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ரவுடி வெள்ளைகாளியை ஜன.24 சிறைக்கு அழைத்துச் சென்றபோது போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் தாக்குதல் நடத்தினார்
பெரம்பலூர் அருகே திருமாந்துறையில் ரவுடி வெள்ளைக்காளியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தினார். தாக்குதலில் 2 போலீசார் காயம் அடைந்த நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா உயிரிழந்தார். அழகுராஜா அரிவாளால் தாக்கியதால் எஸ்.ஐ சங்கருக்கு காயம் ஏற்பட்டது.
