பத்மஸ்ரீ விருதாளர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை; பத்ம விருதுகளை பெற்ற தமிழ கத்தை சேர்ந்த பல்துறை கலைஞர்கள், நிபுணர்களுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை :
2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை தமிழகத்தை சேர்ந்த 13 பேர்கள் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை, ராணுவம், விளையாட்டு, அமைதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், மூன்று பிரிவுகளில் பத்ம விருதுகளை, ஒன்றிய அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இவ்விருதின் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அத்துனைபேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இவர்கள் மென்மேலும் பல விருதுகள் பெற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: