பனாஜி: போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த கோவா மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் 30 நாள் சிறப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் நிறைவு விழா பனாஜியில் நேற்று நடந்தது.
இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்று பேசியதாவது:
கருணையற்ற சட்டம் கொடுங்கோன்மை ஆகிறது, சட்டமற்ற கருணை அலங்கோலமாகிறது என்பதை அது அங்கீகரிப்பதை கண்டிருக்கிறேன். போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான இந்தப் பிரச்சாரம் மாணவர்களை இழிவாகப் பேசாமல் அவர்களுடன் உரையாடியுள்ளது. இந்தப் பிரச்சாரம் மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தாமல் அவர்களை உணர்வுபூர்வமாக ஆக்கியுள்ளது. சமூகம் கைவிட்டவர்களுக்கு அது ஒரு குரலைக் கொடுத்துள்ளது.
போதைப்பொருள் துஷ்பிரயோகம் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக நமது வீடுகளுக்குள்ளும், வகுப்பறைகளுக்குள்ளும், சமூகத்திற்குள்ளும் நுழைந்து, வருங்காலத் திறனை அரித்துவிடுகிறது. போதைப்பொருள் துஷ்பிரயோகம் தனிநபர்களை மட்டுமல்ல, சமூகத்தையே கெடுக்கிறது என்றார்.
