தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிமலை தந்திரி தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.2.5 கோடி முதலீடு: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தங்கம் திருட்டு தொடர்பான சதித்திட்டத்தில் இவருக்கு நேரடி தொடர்பு இருப்பது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் உண்ணிகிருஷ்ணன் போத்தி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நகை வியாபாரி கோவர்தன் மற்றும் சென்னை அம்பத்தூர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோருடன் தந்திரிக்கு நேரடி தொடர்பு இருந்துள்ளது.

தந்திரிக்குத் தெரிந்தே தான் சபரிமலையில் அனைத்து மோசடிகளும் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இவர் திருவல்லாவிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2.5 கோடி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் தந்திரி இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் செய்யவில்லை. இது சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: