×

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 22, 23ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

நேற்று (24ம் தேதி) மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். தொடர்ந்து 9 சட்டமுடிவுகள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Chennai ,
× RELATED சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய...