புதுடெல்லி: வங்கதேசத்தில் நடந்த மாணவர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாதி கடந்த டிசம்பரில் சுட்டு கொல்லப்பட்டார். இவரது மரணத்தால் வங்க தேசத்தில் பெரும் கலவரம் வெடித்தது. ஹாதியை கொன்ற கொலையாளி இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியானதால் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடந்தது. இந்துக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. ஆனால் வங்கதேசத்தில் நடக்கும் பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் மத ரீதியிலான தாக்குதல் இல்லை என்று வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார். அங்கு அடுத்தமாதம் 12ம் தேதி பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்திய நிறுவனங்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வங்கதேசத்தில் உள்ள .
இந்திய தூதர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினர் நாடு திரும்புமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில்,வங்கதேசத்தின் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினரை நாடு திரும்புமாறு ஒன்றிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் முழு பலத்துடன் தொடர்ந்து செயல்படும் என்றன.
