திருத்துறைப்பூண்டி தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜன. 28: திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறந்ததால் 7500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை முடிந்தது. தாலுகாவில் 65 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து இருந்தனர். நிவர், நிரவி புயல், வடகிழக்கு தொடர் மழை, இந்த மாதம் பெய்த கனமழையில் சாகுபடி செய்த சம்பா சாகுபடி நெல்வயல்கள் மழைநீர் தேங்கி அறுவடைக்கு தயாரான நெல் கதிர்கள் மழைநீரில் மூழ்கி முளைத்தும் , சாய்ந்தும் பல கிராம்களில் பயிர் கள் அழுகியது இந்த நிலையில் எஞ்சிய சம்பா நெல் அறுவடை கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி தாலுகாவில் மொத்தம் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை

இதனால் அந்தந்த பகுதிகளில் அறுவடை செய்த நெல்மூட்டைகளை போடமுடியாமல் நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கிவைத்துவிவசாயிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 31 நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாங்குடி திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி காளிமுத்து கூறுகையில், மாங்குடி கிராமத்தில் இன்னும் அறுவடை துவங்கவில்லை. ஆனால் திறக்கப்படாத மாங்குடி நெரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய வெளியூர் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி எடுத்து செல்ல அதிகாரிகள் நடவடக்கை எடுக்க வேண்டும்என்றார்.

Related Stories: