- சிறு கைத்தொழில் வளர்ச்சி வங்கி
- மத்திய அமைச்சரவை
- புது தில்லி
- மோடி
- தில்லி
- இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கிக்கு ரூ.5,000 கோடி பங்கு மூலதனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 2028ம் ஆண்டிற்குள் கூடுதலாக 25.74 லட்சம் புதிய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 6.90 கோடி எம்எஸ்எம்இ நிறுவனங்களால் 30.16 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சராசரியின் அடிப்படையில், 2027-28ம் நிதியாண்டிற்குள் புதிய 25.74 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களை இணைப்பதன் மூலம் 1.12 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், அடல் ஓய்வூதிய திட்டத்தை 2030-31ம் நிதியாண்டு வரை தொடர்வதற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
