டிஸ்பிளேக்கள் மீதான சுங்க வரி 20% ஆக உயர்வு: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: மின்னணுத் துறையில் உள்நாட்டு மதிப்பு கூட்டலை நீண்டகாலமாக ஊக்கப்படுத்தாத தலைகீழ் வரி கட்டமைப்பை சரிசெய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திறந்த செல்கள் மற்றும் முக்கிய கூறுகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை அறிவித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா கொள்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைகீழ் வரி கட்டமைப்பை சரி செய்ய பிளாட் பேனல் டிஸ்பிளேக்கள் மீதான அடிப்படை சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கவும், எல்சிடி மற்றும் எல்இடி தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும் திறந்த செல்கள் தயாரிப்பை ஊக்குவிக்கவும், முந்தைய கொள்கை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, திறந்த செல்களின் பாகங்களுக்கு அடிப்படை சுங்க வரியை அரசாங்கம் முழுமையாக விலக்கு அளித்துள்ளது. இந்த மாற்றங்கள் உள்நாட்டு மின்னணு உற்பத்தியை ஆதரிக்கும், இறக்குமதி சார்பைக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: