கந்தன்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர், ஜன. 28: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கோயில் கந்தன்குடியில் வள்ளி தேவசேனா சமேத மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று நேற்று மகா கும்பாபிஷேக மானது நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 22ம் தேதி முதல் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பணிகள் துவங்கிய நிலையில் 24ம் தேதி சிவாச்சாரியார்கள் கணேஷ்குமார் மற்றும் சங்கராத் மஜ சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் துவங்கி நேற்று காலை வரையில் 6 கால பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் காலை 9 மணி அளவில் கடம் புறப்பாடு நடைபெற்று 9 .45 மணி அளவில் அருள்மிகு வள்ளி தேவசேனா, சுப்ரமணியசாமி உட்பட அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின் துணைப் பெருந்தலைவர் சிபிஜி அன்பழகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் முருகையன், தக்கார் பிரபாகரன், ஆய்வாளர் மாதவன், மேலாளர் வள்ளி கந்தன் மற்றும் அலுவலர்கள், உபயதாரர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர். மேலும் மாலையில் திருக்கல்யாணம் மற்றும் சுப்பிரமணிய சுவாமி வீதிஉலா காட்சி நடைபெற்ற நிலையில் இன்று முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன.

Related Stories: