காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி திருவாரூரில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன. 28: :காலிப்பணியிடங்களை நிரப்பிட கோரி திருவாரூரில் டிஎன்பிஎஸ்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்துவரும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்தப்படி தகுதியுள்ள கொள்முதல் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், நெல்கொள்முதலுக்கான சாக்கு, சணல் உள்ளிட்ட தளவாட பொருட்களை கட்டுப்பாடில்லாமல் வழங்கிட வேண்டும், கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கிட வேண்டும்என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பாக ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்புடைய டிஎன்சிஎஸ்சி தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், இணை பொது செயலாளர் குணசேகரன், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 எடுத்து கொண்டு விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். அவரது வரு கைக்காக தொண்டர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் ஆர்வத்துடன் காத்திரு க்கின்றனர். தமிழகம் வரும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க காத்திருக்கிறோம். அவரின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர செயலா ளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் செய்திருந்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சரவணச்செல்வன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் அமிர்தராஜ், மாவ ட்ட இணைச்செயலாளர் இளவரசி இளையராஜா, தொழிற்சங்க மாநில துணை தலைவர் ஆசைத்தம்பி, ஒன்றிய செயலாளர் ரங்கராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் குணசேகரன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் அசேசம் எஸ்டிஎஸ் அரசு, வல்லாங்குடி காடு சோபா தமிழ்வாணன், நகர துணை செயலாளர் அண்ணாதுரை, நகர நிர்வாகிகள் பாரதி, செல்லத்துரை, அர்ஜுனன், பாலமுருகன், ஜெயக்குமார், மகேஸ்வரன் உள்ளிட்ட ஏரா ளாமான அமமுகவினர் கலந்து கொண்டனர்.      

Related Stories: