டிஆர்.பாலு பேச்சு உயர்ந்துகொண்டே போகும் டீசல் குறைந்து வரும் மீன் விலை நஷ்டத்தில் மீன்பிடி தொழில் உரிய விலை கிடைக்க அரசுக்கு கோரிக்கை

சேதுபாவாசத்திரம், ஜன.28: டீசல் விலை உயர்ந்து கொண்டே போகும் நிலையில். மீன்கள் விலை குறைந்து கொண்டே போவதால் மீன்பிடி தொழில் நஷ்டத்தில் இயங்குவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன. இவை அனைத்தும் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். டீசல, விலை மட்டும் கிடு கிடுவென உயர்ந்து கொண்டே செல்வதால் மீன்பிடி தொழில் நஷ்டத்தில் இயங்வதாகவும், இரால் மற்றும் மீன்விலை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறுகையில், டீசல் விலை 30 ரூபாயாக இருக்கும்போது ஒரு கிலோ இரால் 900 ரூபாயாக இருந்தது.

தற்போது டீசல் விலை 82 ரூபாயாக உள்ள நிலையில், கொரோனா காலத்திற்கு முன் 800 ரூபாயாக இருந்த இரால் தற்போது 300 முதல் 350 ரூபாயாக உள்ளது. 600 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்த வஞ்சிரம், கொடுவாய், காளை, வாவல் போன்ற மீன்கள் தற்போது 300 ரூபாய் முதல் 350 ரூபாயாக உள்ளது. 30 கவுண்ட 900 ரூபாய் விற்பனை செய்த கருவண்டு என கூறப்படும் உயர்ந்த வகை இரால் தற்போது அதே 30 கவுண்ட் 400 ரூபாய் முதல் 450 ரூபாயாக உள்ளது. டீசல் விலை உயர்ந்து கொண்டே போகும் நிலையில் இரால் மற்றும் மீன் விலை குறைந்து கொண்டே செல்வதால் மீன்பிடி தொழில் மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை செய்யும் மத்திய மாநில அரசுகள் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வரை அன்னிய செலாவணி ஈட்டித்தரும் மீனவர்களை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. எனவே உரிய விலை கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: